வொக்ஸ்வெகன் கார் நிறுவனத்தின் தொழிற்சாலை இலங்கையிலும்!

Thursday, September 1st, 2016

ஜேர்மன் வொக்ஸ்வெகன் கார் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று இலங்கையில் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனம், இது தொடர்பான அறிவிப்பினை தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர்இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே அந்த நிறுவனத்தின் தொழிற்சாலைக்கென இடத்தை ஒதுக்கும் நடவடிக்கைகள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், வொக்ஸ்வெகன் நிறுவனம் இலங்கையில் தனது தொழிற்சாலையை அமைக்காது என ஏற்கனவே தெரிவித்தமைக்கான காரணம் “குறித்த நிறுவனத்தின் பொருளாதார சிக்கலே அன்றி அது இலங்கை அரசின் பிரச்சினையால் அல்ல” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் மீண்டும் குறித்த நிறுவனமே இலங்கையில் தொழிற்சாலையை அமைப்பதற்கு முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts: