வைரஸின் தாக்கம் தீவிரம்! உயிரிழப்புக்களை தவிர்க்க வைத்தியர்கள் ஆலோசனை!

Friday, January 13th, 2017

 

கண்டி வைத்தியசாலையில் H1N1 என்ற நோய் தொற்றினால் 3 பேர் மரணமடைந்துள்ளமையை  அடுத்து சளியுடன் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

திடீரென ஏற்படும் சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதே இந்த நோயின் அறிகுறிகளாகும்.

எப்படியிருப்பினும் ஏதாவது நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கே இந்த நோய் தொற்றின் தாக்கம் தீவிரமாக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமான நபருக்கு இந்த தொற்று ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றினால் மூடப்பட்ட கண்டி வைத்தியசாலையின் நோயாளர் வாட்டு நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் வைத்தியசாலைக்கு வரும் போது முகத்தை மூடி வருமாறும் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் எனவும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

h1n1-vaccine1

Related posts: