வைத்தியர்கள் இன்மையால் மாணவி பரிதாபமாக பலி..!

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றய தினம் ர.டிலாஜினி என்ற 18 வயது மாணவி திடீர் சுகயீனமுற்ற நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை. மேலும் உடனடி வைத்திய உபகரணங்களும் இல்லாத நிலையில், குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மாநகர சபையின் மற்றுமொரு ஊழல் அம்பலம்!
அத்தியாவசியமற்ற அனைத்து செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்துங்கள் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெர...
மிருக வைத்தியர்களுக்கு பற்றாக்குறை - மிருக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!
|
|