வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை!

Wednesday, July 27th, 2016

வைத்தியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த வாரத்துக்குள் வைத்தியர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொடுப்பது குறித்த சுற்றறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ள அவர்

தற்போது வைத்தியர்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழிற் சங்கங்களுடன் பேசி அவர்களது உரிமைகளை பெற்றுக் கொடுக்கத் தான் தயார் எனவும் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்

Related posts: