வைத்தியசாலை நிலத்திற்கு பதித்த மாபிள்கள் உடைவு –   வைத்திய அறிக்கை பெறச்செல்வோர் சிரமம்!

Saturday, August 11th, 2018

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை மேல் மாடியில் உள்ள நிலத்திற்கு அமைக்கப்பட்ட மாபிள்கள் உடைந்த நிலையில் காணப்படுவதால் வைத்திய அறிக்கை பெறச் செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களிற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவின் மேல் தளத்தில் நிர்வாகப் பிரிவு, குருதிப் பரிசோதனை நிலையம் என்பன அமைந்துள்ளன.

அங்குள்ள தரையில் அமைக்கப்பட்டுள்ள மாபிள்கள் உடைந்த நிலையில் காணப்படுவதால் வைத்திய அறிக்கை பெறச்செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களிற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டது.

Related posts: