வைத்தியசாலை சுகாதார தகவல்கள் முகாமைத்துவ கட்டமைப்பு ஆரம்பம்!

Thursday, July 27th, 2017

வைத்தியசாலை சுகாதார தகவல்கள் முகாமைத்துவ கட்டமைப்பு (Hospital Health Information Management System) கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சமீபத்தில் இடம்பெற்றது.15 கோடி ரூபா செலவில் இந்த வைத்தியசாலை நவீனமயப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கென கையளிக்கும் நிகழ்வின் போது இந்த கட்டமைப்பை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் டிஜிற்றல் சுகாதார வேலைத்திட்டத்தில் (Digital Health Programme) இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளர்களுக்கு விரைவாகவும் முறையான சேவையை இதன்மூலம் வழங்கமுடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: