வைத்தியசாலை கழிவுகள் கடலில் கலப்பதாக தகவல் – திருமலை கடற்கரையை பார்வையிட்டார் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர்!

Tuesday, July 18th, 2023

திருகோணமலை பொது வைத்தியசாலை இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதன் காரணமாக தமது துறை பாதிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை படகோட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பீ.மதன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து குறித்த பகுதிக்கு இன்று (18)  விஜயம் செய்த சுற்றுலாப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் அவ் இடத்தினை பார்வையிட்டு அங்கு காணப்படும் குறைபாடுகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை பொருத்தமான விதத்தில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கையினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அதன் மூலமாக வெகு விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுற்றுலா பணியகத்தின் தவைவர் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: