வைத்தியசாலைகளுக்கு டீசல் வழங்க ஜப்பானிடமிருந்து 46 மில்லியன் டொலர் மானியம் – நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜப்பான் தூதுவர் உடன்படிக்கையில் கைச்சாத்து!

Thursday, February 23rd, 2023

நாடு முழுவதும் உள்ள பொது மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான மானியமாக வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இடம்பெற்றது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 20 மில்லியன் லீற்றர் டீசலை வழங்கவுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலங்கையில் மருத்துவ சேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த மனிதாபிமான உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: