வைத்தியசாலைகளுக்கு செல்ல மறுக்கும் வைத்தியர்கள் –நோயாளர்கள் அவதி!

Saturday, August 17th, 2019

கஷ்ட பிரதேசங்களுக்கு செல்ல வைத்தியர்கள் மறுக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் 25 வைத்தியசாலைகளில் இதுவரை வைத்தியர்கள் இல்லை என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தன்போது மேலும் அவா் கூறுகையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள 25 வைத்தியசாலைகளுக்கு மருத்தவர்கள் இல்லை.

5 ஆதார வைத்தியசாலைகளில் மருத்தவர்கள் இல்லை. கிராமப்புற வைத்தியசாலைகளுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு விருப்பம் இன்மையே இதற்குக் காரணம் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். வெறுமனே நகரப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகளின் கட்டடங்களைக் கட்டுவதால் எந்தப் பயனும் இல்லை.

கிராமப்புற வைத்தியசாலைகளில் மருத்துவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். அங்கு பணிபுரிய விரும்பும் மருத்துவர்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்கவேண்டும். அதன் ஊடாகவே மருத்தவர்கள் அங்கு சென்று பணிபுரிவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்