வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் தபால் ஊழியர்கள்!

Friday, July 12th, 2019

தமது சம்பளப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு வழங்க தவறினால் எதிர்வரும் 22ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தபால் மா அதிபருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதியில் இருந்து 22ஆம் திகதி வரை தொடர்ச்சியான வேலை நிறுத்தம் செய்திருந்ததாகவும், அதன்போது தீர்வு வழங்கப்பட்ட போதிலும் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு வருடத்தை கடந்துள்ள போதிலும் சம்பள ஆணைக்குழுவால் சரியான அறிக்கை இதுவரை முன்வைக்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

எதிர்வரும் 15ஆம் திகதி தபால் மா அதிபருடன் கலந்துரையாடலில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 22ஆம் திகதி சுகயீன விடுமுறை செய்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக எச்.கே. காரியவசம் கூறினார்.

Related posts: