வேலைவாய்ப்பு வழங்கலில் வடக்கு – கிழக்கு உள்வாங்கப்படும் விகிதாசாரம் என்ன? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி

யாழ். குடா நாட்டில் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் அதற்கு போதைவஸ்து பாவனை உந்து சக்தியாக அமைவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மாகாணங்களில் தொழிலின்மை பிரச்சினை தலைவிரித்தாடும் நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், 10 இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வடக்கு, கி்ழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் உட்படுத்தப்படும் விகிதாசாரத்தை வெளிப்படுத்த முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளில் பெரும்பாலானவர்கள் தொழிலின்றி தங்களின் வாழ்வாதாரங்களை ஈட்டிக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க ஏதேனும் நடவடிக்கைகள் உள்வாங்கப்பட்டுள்ளதா எனவும் வினவினார்.
Related posts:
தனியார் மருத்துவமனை கட்டணங்களில் வரையறை!
டெங்கு ஒழிப்பு தொடர்பான 2ஆம் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பம்!
மேலும் 210 பேர் நாடு திரும்பினர்!
|
|