வேலைவாய்ப்பு பணியகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை!

Saturday, March 4th, 2017

சவூதி அரேபியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு வேலைக்காக சென்று எவ்வித தகவல்களும் இன்றி இருக்கும் ஐவர் குறித்து அவர்களது உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அது குறித்து தகவல்கள் தமது பணியகத்திற்கு தேவைப்படுவதாகவும் தெரிந்தவர்கள் வேலைவாய்ப்பு பணியக தொலைபேசி இலக்கங்களான 011 – 4379328 அல்லது 011 – 2864136 ஆகிய இலக்கங்களூடாக பொதுமக்களுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

காணமல் போயுள்ளோறது பெயர் மற்றும் முகவரிகள் பொதுமக்கள் கவனத்திற்கு…

எம்.எம்.எம். பாத்திமா றிஸ்மியா, குடாகம 08, புதிய நகர், வீரவில
ஐ. கே. இந்திராணி, அகதிகள் முகாம், பெட்டித்திடால், மூதூர்.
எஸ். மங்களேஸ்வரி, மதுகரை,நானட்டன், மன்னார்.
ஓ. எல். வாஜித், புலக் ஜா கிழக்கு 02, சம்மாந்துறை.
எம்.சந்திரலதா, பெரிய பில்லாவ, தந்திரிமலை

2222-13

Related posts: