வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Wednesday, December 8th, 2021

இவ்வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சராசரியாக, ஒவ்வொரு வருடமும் 200,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

எனினும், கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 53,000 ஆகக் குறைவடைந்திருந்தது. கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: