வேலையற்ற பட்டதாரிகள் கவனத்திற்கு!

Wednesday, March 7th, 2018

அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 14 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கொழும்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பெருளாதார அமைச்சின் முன்னால் நடைபெறவுள்ளதாக ஒன்றினைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

எனவே இது தொடர்பாக விண்ணப்பித்த அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் இக்கலந்துலையாடலில் அவசியம் கலந்து கொள்ளுமாறு அச்சங்கம் பட்டதாரிகள் அனைவரையும் கேட்டுள்ளது .

மேலதிக தொடர்பிற்கு 0713533827 , 0773344611 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இந் நியமனங்களை விரைந்து பெற ஒன்றினைந்த பட்டதாரிகள் சங்கத்தால் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் முன் இடம் பெறவுள்ள குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது. மேலும் இக் கலந்துரையாடலில் அனைத்து பட்டதாரிகளின் கையெழுத்து உள்ளடங்கிய மகஜர்களும் கையளிக்கப்படவுள்ளளது. என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.

இது தவிர கலந்து கொள்பவர்கள் உங்கள் மாவட்ட ஆண்டு பிரதிநிதிகள் தலைவர் ப.கிரிசாந்தனிடம் உங்கள் வரவுத் தகவலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன் வழங்குதல் வேண்டும்

Related posts: