வேலையற்ற பட்டதாரிகளின் 5 ஆம் நாள் போராட்டத்திலும் ஈ.பி.டி.பி. பங்கேற்பு!

Saturday, March 4th, 2017

தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரி கடந்த 27 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக  வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால்  முன்னெடுக்கப்படும் ஐந்தாம் நாள் போராட்டத்திலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

கடந்த-2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கற்று வெளியேறிய சகல பட்டதாரிகளுக்கும் பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட  நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்தின், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்  ஆகியோர் இணைந்துகொண்டு ஆதரவை வழங்கினர்.

இதனிடையே போராடிவரும் வேலையற்ற பட்டதாரிகளுடன் நேற்றுமுன்தினம் தொலைபேசியூடாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உரையாடியதுடன் அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டதுடன் குறித்த பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2

1

4

Related posts: