வேலையற்றோர் வீதத்தில் அதிகரிப்பு – அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டு!

Wednesday, July 22nd, 2020

நாட்டில் வேலையற்றோர் வீதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமை ஆண்டின் முதலாவது காலாண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் நான்கு இலட்சத்து 83 ஆயிரத்து 172 பேர் தொழிலை இழந்துள்ளனர் என்றும் அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துதுடன் இது நூற்றுக்கு 5.7 வீதமாகும் என அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் வேலையற்றோர் வீதம் 4.7 ஆக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: