வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகும் நோயாளர் காவு வண்டி சாரதிகள்!

Monday, June 26th, 2017

நாளை மற்றும் நாளை மறுதினம் நோயாளர் காவு வண்டி சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றில் ஈடுபட உள்ளதாக அகில இலங்கை சுகாதார பணியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண நோயாளர் காவு வண்டி சாரதிகள் 11 பேர் வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்தல் மற்றும் சில உள்ளுராட்சி மன்றங்களில் நோயாளர் காவு வண்டி சேவைகள் ஆரம்பிக்கப்படாமை உள்ளிட்ட சில காரணிகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளும் போது சுகாதாரப் பணியாளர்களை திட்டுவதும் விமர்சனம் செய்வது பொருத்தமற்றது என சம்மேளனம், அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நாட்டின் அனைத்து சுகாதார சேவை தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Related posts: