வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி புங்குடுதீவு பொது அமைப்புகளால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் கையளிப்பு!

வேலணை பிரதேச செயலாளர் அம்பலவாணர் சோதிநாதனின் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் புங்குடுதீவு பொது அமைப்புகள் ஒன்றிணைந்து மகஜர் கையளித்துள்ளனர்.
இன்று மாலை அமைச்சரது யாழ் மாவட்ட அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த குறித்த புங்குடுதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அமைச்சருக்கான மகஜரை கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையிலான முக்கியஸ்தர்களிடம் கையளித்திருந்தனர்.
குறித்த மகஜரில் வேலணை பிரதேசத்தில் சிறப்பான சேவையாற்றிவந்திருந்த குறித்த பிரதேச செயலர் திடீரென காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாது அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் எமது பிரதேசத்தில் அவரால் முன்னெடுக்கப்பட்ட பணிகளை தொடர்வதற்கு அவருக்கு அவகாசம் வழங்கும் விதமாக அவரது இடமாற்ற உத்தரவை இரத்து செய்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|