வேலணை பிரதேச சபை தவிசாளர் தோழர் மோகனின் மாமியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் மூத்த உறுப்பினரும் தீவகம் தெற்கு வேலணை பிரதேச சபையின் தவிசாளருமான தோழர் மோகன் – நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி அவர்களின் மாமியார் தாமோதரம்பிள்ளை சொர்ணம் அவர்களின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்மாலை அணிவித்து மலர்வளையம் சாத்தி தமது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்துயுள்ளனர்.
வவுனியாவை வசிப்பிடமாக கொண்ட அமரர் தாமோதரம்பிள்ளை சொர்ணம் வயது மூப்பின் காரணமாக தனது 83 ஆவது வயதில் நேற்றையதினம்(22) காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வவுனியாவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் அங்கு சென்ற கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தலைமையிலான முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி தமது அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்ததுடன் அன்னாரின் பிரிவால்துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|