வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு எட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் – ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு – காங்கிரஸ் நடுநிலமை!
Tuesday, December 6th, 2022வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக எட்டு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குள் இருக்கும் குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் 8 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா பெரமுன கட்சியின் 2 உறுப்பினர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்தரக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர்கள் என 20 உறுப்பினர்களை கொண்ட வேலணை பிரதேச சபையின் புதிய ஆண்டுக்கான பாதீட்டுக்கான விசேட கூட்டம் இன்றையதினம் (06) தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
தவிசாளர் கருணாகரகுருமூர்தியால் சபையின் விவாதத்திற்கு சமர்ப்பிக்க்பட்ட குறித்த பாதீடு தொடர்பில் சபையின் உறுப்பினர்களிடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக சபையால் இன்னமும் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களயால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சபை உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவுற்றபின் குறித்த பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் வாக்டிகடுப்பில் கலந்துகொள்ளாது வெளியேறிச் சென்றிருந்த நிலையில் பாதீட்டை ஆதரித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா பெரமுன கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் உறுப்பிர் உள்ளிட்ட 9 உறுப்பினர்கள் ஆதரவாக வக்களித்திருந்தனர்.
சபையில் ஓர் அங்கத்துவத்தை கொண்டுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் நடுநிலை வகித்திருந்த நிலையில் ஓர் அங்கத்துவத்தை கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எதிராக வாக்களித்திருந்தார்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்காக 9 வாக்ககள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் மேலதிக 8 வாக்குகளால் பாதீடு நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|