வேலணை சாட்டி குடிநீர் கிணறுகளின் பாதுகாப்பு தொடர்பில் தவிசாளர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆராய்வு!

Tuesday, January 8th, 2019

வேலணை சாட்டி பிரதேச குடிநீர் கிணறுகளின் பாதுகாப்பு தொடர்பில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான விஷேட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தறிந்துள்ளனர்.

இனந்தெரியாத விஷமிகளால் வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சாட்டி குடிநீர் கிணற்றுக்குள் ஒயில் ஊற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து வேலணை பிரதேச குடிநீர் வழங்கல் தொடர்பில் சில அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கிணறுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவும் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி, சபையின் செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

49676520_528356767659396_2102301790341955584_n 49601293_2303649996312924_3936424860648996864_n

49597615_297505667576882_5762759003469774848_n

49661424_640196596395587_1566240634296074240_n

Related posts: