வேலணையில் துணிகர கொள்ளை!

Friday, December 29th, 2017

முதலாம் வட்டாரம் வேலணைப் பகுதியல் உள்ள வீடு ஒன்றிற்குள் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் உள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்பஸ்தரை தாக்கிவிட்டு 3 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகத்திற்கு கறுப்பு துணியைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்கள் கத்திகள், பொல்லுகள் சகிதம் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். பின்னர் வீட்டில் பெண்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகையின் பெறுமதி 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதுவரை கொள்ளை சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: