வேலணைமுதல் புங்குடுதீவு வரையான பாலம் புனரமைப்பு தொடர்பில் வருட இறுதிக்குள் நடவடிக்கை -அமைச்சர் பந்துல தெரிவிப்பு!

Friday, January 12th, 2024

வடக்கில் வேலணைத் துறையிலிருந்து புங்குடு தீவு வரையான நான்கு கிலோ மீற்றர் நீளமான பாலத்தை புனரமைக்கும் நடவடிக்கைகளை, இவ்வருட இறுதிக்குள் முன்னெடுக்க முடியும் என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டுக் கடன் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் உடனடியாகவே இப்பாலத்தை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

குறித்த பாலம் மற்றும் வீதி தொடர்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டது. நிதி இல்லாமையே அதனை ஆரம்பிப்பதற்கு உள்ள பிரச்சினையாகும் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நிறைவுறும் வரை, எந்த சர்வதேச நாடுகளிலிருந்தும் அதற்கான பணத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதால் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும், குறிப்பாக இந்த வருட இறுதிக்குள் இத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எழுப்ப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவ...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் தகவ...
கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் சேவை செய்வதே நமது இலக்கு – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழ...