வேலணைப் பிரதேச செயலர் இடமாற்றத்தைக் எதிர்த்து யாழ். மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்புப் போராட்டம்!

Saturday, April 2nd, 2016

வேலணைப்  பிரதேச செயலர் மஞ்சுளா தேவி சதீஸ்வரனின் இடமாற்றத்தைக் கண்டித்து அப்பிரதேச மக்களால் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (02) காலை  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

‘மக்களுக்காகக்  கடலில் நடந்த பெண்’ , ‘ஏழைகளின் பங்காளி’  ,’வெள்ள நிவாரணத்திற்கு உணவு அளித்த அம்மா… மக்கள் பசி தீர்த்த அம்மா வேண்டும்…..’  ‘சமூக சேவையாளர் வேண்டும்’, ‘புதிய செயலரை தடுத்து நிறுத்துக .’ போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கபட்ட பதாதைகளைக் போராட்டத்திலீடுபட்டிருந்தவர்கள்   கைகளில்  தாங்கியவாறு முன்னெடுத்தனர்.

வேலணை பிரதேச செயலர் மஞ்சுளா தேவி சதீஸ்வரனின் இடத்துக்கு நேற்று(1) முதல் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணப் பிரதேச செயலராகப் பதவி வகித்த  சுகுணரதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8ca73348-7425-4a2d-b9b4-776b0392a2f8

4fa80e99-12c5-4665-9a5d-55df3684d8bb

Related posts: