வேலணைப் பிரதேச சபையால் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

தீவகம் தெற்கு வேலணை பிரதேச சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேலணை சிப்பனை முருகன் வீதிக்கு ஒரு கோடி ரூபாவும் நயினாதீவு மலையின் நாயனார் வீதிக்கு 80 இலட்சம் ரூபாவும் தடுப்பணைக்கு 20 இலட்சம் ரூபாவும் நயினாதீவு ஆலங்குள வீதிக்கு 10 இலட்சம் ரூபாவும் நயினாதீவு அனலைதீவு மக்களுக்கு குடிநீர் வழங்க கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்துக்கு 15 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலடி இறங்குதுறைக்கு 12 கோடியே 30 இலட்சம் ரூபாவும் நயினாதீவில் சந்தை அமைப்பதற்கு 35 இலட்சம் ரூபாவும் நயினாதீவு மண்கும்பான் சாட்டி பிரதேசத்திற்கு தெருவிளக்கு அமைப்பதற்கும் நிழல் மரங்கள் நடுவதற்கும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக 50 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வேலணை பிரதேச தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|