வேம்படியில் தரம் 6 க்கு தெரிவானோருக்கு முக்கிய அறிவித்தல்!

Wednesday, January 23rd, 2019

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் தரம் 6 க்குத் தெரிவு செய்யப்பட்டு இதுவரை பாடசாலைக்குச் சமூகமளிக்காத மாணவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதிக்குள் இணைந்து கொள்ளுமாறு அதிபர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு தரம் 6 க்கு 167 வெட்டுப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சின் அனுமதியுடன் 281 மாணவர்கள் பாடசாலைக்கு இணைத்து கொள்ளப்படுவதற்கான பெயர் விபரங்கள் பாடசாலை அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 17 ஆம் திகதி தரம் 6 க்கான புதுமுக மாணவர்கள் வரவேற்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களில் இதுவரை வகுப்பில் இணைந்துகொள்ளாதவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் இணைந்துகொள்ள வேண்டும்.

அவ்வாறு இணைந்து கொள்ளாத மாணவர்கள் இடத்துக்கு வேறு மாணவர்கள் உள்வாங்குவது  தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு கல்வி அமைச்சுக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: