வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டார் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் – கண்டித்து வடமாகாண பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

Monday, August 8th, 2022

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ வதிவிடம் ஆகியவற்றில் கடந்த 30 ஆம் திகதி இரவு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு 65 லீட்டர் எரிபொருளை மீட்டு இருந்தனர்.

அலுவலக மின் பிறப்பாக்கியின் தேவைக்கான 50 லீட்டர் டீசல், பிரதேச செயலரின் சொந்த பாவனைக்காக சேமித்து வைத்திருந்த 10 லீட்டர் பெட்ரோல் மற்றும் 5 லீட்டர் மண்ணெண்ணெய் என்வற்றையே பொலிஸார் மீட்டு இருந்தனர் என பிரதேச செயலர் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதேச செயலரை வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்குடன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் நடந்து கொண்டதாகவும் , திட்டமிட்டு பிரதேச செயலரை அசௌகரியத்திற்கு உட்படுத்தி அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் நடந்து கொண்டதாகவும், அதனால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரி நிர்வாக சேவை வடக்கு கிளை சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

வடக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் இன்றையதினம் திங்கட்கிழமை காலை 09 மணி முதல் 11 மணி வரையில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அச்சமின்றி சேவையை முன்னெடுக்க முடிந்துள்ளது - வடமாகாண ஜனந...
மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை -சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்...

வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுங்கள் - முச்சக்கர வண்டி சாரதிகளிடம...
கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கிராம உத்தியோகத்தர்கள் அறிக்கை வழங்க வேண்டும் - வ...
உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்கள் - தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இ...