வேட்பு மனு தாக்கலுடன் சொத்து விபரங்களையும் ஒப்படைக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்!

Monday, September 19th, 2016

தேர்தல் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே சொத்து விபரங்கள் ஒப்படைக்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டுமென பெப்ரல் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அல்லது அதிலிருந்து ஒரு வார காலத்திற்குள் சொத்து விபரங்களை ஒப்படைக்கும் வகையில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளரிடம் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி கோரியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

அவ்வாறு சொத்து விபரங்களை ஒப்படைக்கத் தவறினால் வேட்பு மனு நிராகரிக்கப்படக்கூடிய வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த இரண்டு முறைமைகளும் நடைமுறைச் சாத்தியமற்றது என்றால் தேர்தல் தினத்திற்கு முன்னதாக சொத்து விபரங்கள் ஒப்படைக்கப்படக்கூடிய வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சொத்து விபரங்களை ஒப்படைக்கத் தவறும் நபர்கள் வெற்றியீட்டினாலும் அவர்கள் பதவி இழக்கக்கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்ய வேண்டும்.

ஏதேனும் சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பிரதிநிதி பதவிகளில் வெற்றிடம் ஏற்பட்டால் அந்தப் பதவிக்கான வெற்றிடத்தை கட்சிகள் நிரப்பாது, தேர்தல் நடத்தி நிரப்பும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த சட்டங்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலிருந்து அமுல்படுத்தப்பட வேண்டுமென ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Pafferel_4

Related posts:

உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிகண்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம் - வேட்பானளர்கள் மத்தியில...
சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் பொதுமககள் அலட்சியம் – கொரோனா மீண்டும் பரவலாம் என அரசமருத்துவ அதிகா...
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைவு - கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸ...

சுற்றுலாத்துறையின் மூலமும் இவ்வருடம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெறவேண்டும் - ஜனாதிபத...
அரசியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்ட எவரும் தற்போது சிறைச்சாலைகளில் இல்லை – நாட...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான தீர்மானம் உறுதி!