வேட்புமனு தினம் இன்று அறிவிப்பு!

Monday, December 4th, 2017

நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக தேர்தலை நடத்துவதற்கு தினம் அறிவிக்க முடியாதிருந்த 208 உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுக்களை கோரும் தினம் இன்று (04) மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, டிசம்பர் 18 ஆம் திகதி தொடக்கம் வரையான காலப்பகுதியில் வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த 208 உள்ளூராட்சி மன்றங்களுக்காகவும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று தொடக்கம் முன்னெடுக்கப்படும்.

இதுவரை தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் 93 இனதும் வேட்பு மனு கோரும் பணிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பித்து 14 ம் திகதி நண்பகல் வரை இடம்பெறும்.

வேட்புமனுக்கள் கோரப்பட்ட பின்னர் வாக்களிப்பு தினம் தொடர்பாக தேர்தல்கள் ஆணையகம் அறிவிக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: