வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை – அமைச்சரவையும் அனுமதி வழங்கியது!
Wednesday, May 3rd, 2023உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள், தாங்கள் போட்டியிடும் வட்டாரத்திலுள்ள அரச நிறுவனங்களை தவிர்த்து, அருகிலுள்ள வேறு வட்டாரங்களில், இடமாற்றம் மூலம் சேவையில் ஈடுபட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற அடிப்படையில், பிரதமர் தினேஸ் குணவர்தன இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இந்த அனுமதி மூலம் குறித்த அரச ஊழியர்கள் தாம் போட்டியிடும் வட்டாரம் தவிர்த்து, வேறு வட்டாரங்களிலுள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை வந்தடைந்தது சீனாவின் சினோபாம் - நேரடியாக சென்று பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
நவம்பர் முதல்வாரத்துக்குள் தீர்க்கமான தீர்மானத்தை எடுங்கள் - சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவுறு...
உள்ளூராட்சித் தேர்தல் அரசாங்கத்தை கவிழ்த்து ஜனாதிபதியை மாற்றக்கூடியதொனறதல்ல - அமைச்சர் பிரசன்ன ரணது...
|
|