வேட்பாளர்களை தெரிவு செய்ய பின்பற்றவேண்டிய விடயங்கள்!

Thursday, November 9th, 2017

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மார்ச் 12 அமைப்பினால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பிலான விபரங்கள் அடங்கிய கடிதங்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கடிதத்தில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான சீரான வழிமுறைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் நான்கு அம்ச கோரிக்கைகளையும் அந்த கடிதத்தில் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 01. வேட்பாளரை தெரிவு செய்யும் போது மார்ச் 12 அமைப்பின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி தெரிவு செய்தல் வேண்டும்.

  1. வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் அனுபவமுள்ளவர்களை தெரிவு செய்தல்.
  2. உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் அனுபவமுள்ளவர்களை, மற்றும் ஆற்றல் உள்ளவர்களை தெரிவு செய்தல்
  3. புதிய தேர்தல் முறைக்கமைய இளம் சமுதாயத்தினருக்கு வாய்ப்பளித்தல். ஆகிய அம்சங்களையே மார்ச் 12 அமைப்பு உள்ளடக்கியுள்ளது.

Related posts: