வெள்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகூடிய உச்ச விலை தொடர்பான வர்த்தமானி இரத்து!

Wednesday, April 29th, 2020

வெள்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகூடிய உச்சபட்ச விலைக்கான வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வெளியாக்கப்பட்ட வர்த்தமானியின் பிரககாரம், ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதியுச்ச விற்பனை விலையாக 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது; இந்நிலையில், தற்போது அந்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் குறித்த வர்த்தமானியை இரத்து செய்யும் வகையிலான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: