வெள்ளையாக மாறி வரும் சிகிரியா!

Tuesday, January 7th, 2020

சிகிரியா மலைக்குன்று திடீரென வெள்ளை நிறமாக மாற்றமடைந்து வருவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலைக்குன்றின் உச்சியில் உள்ள குளியல் தொட்டியின் பல இடங்களில் திடீரென நிறம் மாறியுள்ளமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக திணைக்களத்தின் இயக்குநர் ஜெனரல் பி.பீ.மண்டாவெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல் கிடைத்ததும் விசாரணைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பான அறிக்கை, திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிகிரியா மலைக்குன்றின் மேற்பரப்பிலுள்ள கற்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. கருங்கற்களின் நிறம் வெள்ளை நிறமாக மாறியுள்ளதாக ஆய்வு செய்யும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று பொக்கிஷமாகவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் பகுதியாக சிகிரியா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: