வெள்ளி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை!

Friday, May 26th, 2017

வட மாகாணத்தில் வெள்ளி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்களை நடத்துவதை தடை செய்வது குறித்து வட மாகாண சபை கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண சபை அமர்வில் இது குறித்து உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டனமாணவர்களின் பாதுகாப்பு கருதி வட மாகாணத்தில் மாலை 6 மணியின் பின்னர் தனியார் வகுப்புக்களை தவிர்க்க வேண்டும்

அத்துடன் சமய அனுட்டானத்தின் நிமித்தம் வெள்ளிக்கிழமையும், ஓய்வு வழங்கும் நோக்கில் ஞாயிற்று கிழமையும் தனியார் வகுப்புக்களை தவிர்க்க வேண்டும் என யோசனைகள் முன்வைக்கப்பட்டன

இதன்போது, சகோதர மொழி பேசும் உறுப்பினர் ஒருவர், சிங்கள மாணவர்கள் சமய அனுட்டானங்களில் ஈடுபடும் பௌர்ணமி தினங்களிலும், தனியார் வகுப்புக்களை தடை செய்ய வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார் இதனையடுத்து, குறித்த யோசனைகளை சபை அங்கீகரிப்பதாக அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts: