வெள்ளிக்கிழமையன்று எரிபொருள் விலை சூத்திரம்!

எரிபொருள் விலை சூத்திரம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்தை தான் வழங்குவதாக பிரதியமைச்சர் அஜித் மன்னப்பெரும நேற்று தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரம் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும நேற்று காலை ஊடக அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில் அன்று மாலை தமது அமைச்சிற்கு வருமாறும் பிரதியமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்திற்கு உயர்ந்த பட்ச ஒத்துழைப்பை வழங்க தயார் - சீசெல்ஸ் ஜனாதிபதி
கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் கோப் குழுவை ஒரு பொருட்டாக கருதவில்லை
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பைஸர் நிறுவனத்துடன் உடன்படிக்கை!
|
|