வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூடப்படும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, July 13th, 2022

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமையின் பின்னர் மறு அறிவித்தல் வரை இவ்வாறு வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய வேலைநாட்களில் அரச விடுமுறைதினம் வந்தால் மாத்திரம் வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருளை விநியோகிக்க முடியாமையினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவை தொடர்பான ஏதேனும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு அலுவலக நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையான காலப்பகுதியில் 070 7 677 877 அல்லது 070 7 677 977 என்ற இலக்கங்களுக்கு அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: