வெள்ளவத்தை கட்டிட அனர்த்தத்தினால் சுமார் 10,000 கட்டடங்களை தகர்க்க அரசு தீர்மானம்..?

Sunday, May 21st, 2017

கொழும்பு நகரில் சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சுமார் 10,000 வீடுகள் மற்றும் அலுவலகங்களை தகர்க்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளவத்தையில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்தமையினால் ஒருவர் உயிரிழந்ததுடன் 23 பேர் காயமடைந்திருந்தனர். இதனயடுத்து இலங்கை அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடிந்து வீழ்ந்த குறித்த இத்திருமண மண்டபம் அப்பகுதியில் நிர்மாணிக்க அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மேலும் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

நிர்மாண பணியில் ஏற்பட்ட குளறுபடியே குறித்த இந்த அனர்த்தம் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.

தலைநகரில் 750,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அரை மில்லியன் மக்கள் தினசரி பணிகளுக்காக கொழும்பு வந்து செல்கின்றனர்.

மதிப்பீடுகளுக்கு அமைய குறைந்த பட்சம் சட்டவிரோதமான 10000 வீடுகள், கட்டடங்கள் மற்றும் அலுவலகங்கள் கொழும்பில் உள்ளன. அவற்றினை அகற்றுவதற்கான விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வெள்ளவத்தை பம்பலபிட்டிய பகுதிகளுக்கு இடையில் 1800 இற்கும் அதிகமான கட்டடங்கள் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல சர்வதேச ஊடகங்கள் வெள்ளவத்தையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: