வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து!

வெள்ளவத்தை W.C சில்வா மாவத்தைக்கு அருகாமையிலுள்ள காலி வீதியிலுள்ள கட்டட தொகுதிகளில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது
குறித்த தீ விபத்தினை அணைக்கும் முயற்சியில் 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ அனர்த்தம் காரணமாக 5 கடைகள் முழுமையாக எரிந்துள்ளதுடன் அருகிலுள்ள வீடொன்று பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வொக்ஸ்வெகன் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபரின் முறைகேடு: மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை
தனியார் மருந்தகங்களை விட அரச மருத்துவமனைகளின் நிலை மோசமானது - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பி...
|
|