வெள்ளம் புகுந்த பகுதிகளை பார்வையிட்டார் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரின் முன்னாள் உதவி முதல்வர் றீகன்!

Friday, November 27th, 2020

கடந்த 24 மணிநேரத்தில் கடும் மழை மற்றும் காற்றின் தாக்கத்தினால் யாழ். மாவட்டத்திற்கு உட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிமகிள் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஷ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆயிரத்து 424 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தில் கடலானது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகவும் எனினும், இதுவரையில் சூறாவளி அபாயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக 444 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள என்றும் சிறு நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கனமழை மற்றும் காற்று காரணமாக பாதிக்கப்பட்ட யாழ் மாநகரசபைக்கட்ப்ட்ட பல்வேறு பகுதி மக்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் கொட்டடி, சோழபுரம், கண்ணாபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்றிருந்த உறுப்பினர் றீகன் அவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்களை ஆராய்ந்தறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பார்வைக்கு கொண்டுசென்றிருந்ததுடன் அம்மக்களுக்கான தேவைப்பாடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகரளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: