வெள்ளம் ஏற்படும் அனர்த்த நிலை – தயார் நிலையில் படையினர் என விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு!

நாட்டில் தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் முக்கிய ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் அனர்த நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
களனி கங்கை, நில்வலவை கங்கை, தெதுரு ஒய ,ஜின் கங்கை, ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் வெள்ளம் ஏற்படக்கூடிய நிலைக்கு அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் நிலையம் அறிவித்திருக்கிறது
இதேவேளை தற்போதைய நிலைமையில் அனர்த நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காக விமானப் படையினரும் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கோரிக்கைக்கு அமைய விமானப்படையின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்காக ஒன்பது ஹெலிகொப்டரகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன…
Related posts:
பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு இடமளிக்கப்படாது - பிரதமர்!
அரச ஊழியர்களின் சேவைக் காலத்தை 65 வயது வரை நீடிக்க ஆலோசனை!
வவுனியா விபத்தில் மரணித்த இளைஞருக்கு அரசியல் தலையீடின்றி நீதி கிடைக்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் நாட...
|
|