வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்.புதியசோனகதெரு பகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நுளம்புவலைகள் வழங்கிவைப்பு!

Friday, November 25th, 2016

யாழ்ப்பாணம் புதியசோனகதெரு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

தற்போது பெய்துவரும் மழை காரணமாக தமது பகுதியில் அதிகளவான மழைநீர் தேங்கி நிற்பதனால் நுளம்பின் பெருக்கம் அதிகமாக உள்ளதால்  நோய்கள் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் புதிய சோனகதெரு ஜே/88 கிராம சேவகர்பிரிவில் வாழும் மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அவரது விசேட ஏற்பாட்டின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டு  குறித்த உதவிப் பொருட்கள் இன்றையதினம்(25) யாழ் மாநாகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

15218266_1237282959644122_1515675068_n

Related posts: