வெள்ளத்தால் பாதிப்புற்றோர் சாரதி அனுமதிப்பத்திர பிரதி, அடையாள அட்டையை மீளப்பெற முடியும்

Sunday, June 4th, 2017

வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களின் பிரதிகளை வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனர்த்தம் ஏற்பட்ட மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் ஊடாக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிப்பிற்குள்ளானதால் சாரதி அனுமதிப்பத்திரம் அழிவடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருத்தல் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து கிராம சேவகரிடம் அத்தாட்சிப் பத்திரம் பெற்றிருத்தல் வேண்டும் என வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை, வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தத்தால் எவரேனும் தேசிய அடையாள அட்டையை இழந்திருந்தால் அல்லது அடையாள அட்டை சேதமடைந்திருப்பின் அவர்களுக்கான புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

பொலிஸில் முறைப்பாடு செய்து, கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோரின் அங்கீகாரத்துடன் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தின் மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியுமென ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்

Related posts: