வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவநாதன் நேரில் சென்று பார்வை!

Thursday, November 8th, 2018

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை தவநாதன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மக்களின் அவசர தேவைகள் குறித்தும் கலந்துரை ஆடினார் கிளிநொச்சியில் நேற்றைய தினம் தீடிர் என்று தொடங்கிய பலத்த மழையினால் குளங்களின் நீர்மட்டம் கணிசமான அளவில் உயர்ந்ததோடு தாழ்நில கிராமங்கள் பலவும் நீரில் மூழ்கியதை அடுத்து மக்களும் தங்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து உள்ளனர்

சிவபுரம் பன்னகண்டி முருகண்டி அனந்தபுரம் கிழக்கு ஆகிய பகுதிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளன இந்த நிலையில் அனந்தபுறம் கிழக்கு பகுதில் 55வரையான குடும்பங்கள் பாதிக்கபட்டு உள்ள நிலையில் மாகாணசபை உறுப்பினர் வை தவநாதன் அவர்கள் மக்களின் நிலைமைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டார்

சீரான போக்குவரத்து பாதை வசதிகள் சீரான பாலங்கள் இன்மையே இவ்வாறான இடர்களுக்கு காரணம் என மக்கள் மாகாணசபை உறுப்பினர் தவநாதன் அவர்களுக்கு சுட்டிக்காட்டினர் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான கோரிக்ககைகள் தொடர்பில் முன்னுரிமை அடிப்படையிலான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படு மெனவும் மாகாணசபை உறுப்பினர் வை தவநாதன் மக்களிடம் தெரிவித்தார்.

IMG_7055 IMG_7050 IMG_7047

Related posts: