வெளிவிவகார அமைச்சர் ஸ்லோவேனியா பயணம்!

Sunday, September 4th, 2016

வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்லோவேனியா நாட்டுக்கு செல்லவுள்ளார்.

இன்று ஸ்லோவேனியா செல்லவுள்ள அவர், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்லேவேனியா துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர், அந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

mangala

Related posts: