வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன – ஐ.நாவின் குடியுரிமை பிரதிநிதி இடையே விஷேட சந்திப்பு!

வெளிவிவகாரம், தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை பிரதிநிதி ஹானா சின்கர் மற்றும் சர்வதேச தொழிலார் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் சிம்ரின் சிங்க் ஆகியோரை சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, குறிப்பாக இலங்கையின் பொருளாதாரம், வணிகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிலாளர் அமைச்சில் இடம்பெற்ற குறித்த் சந்திப்பில் சர்வதேச குடிவரவு மற்றும் குடியகழ்வு அமைப்பின் பணிப்பாளர் சரத் டாஷ் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசாங்க நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு; சுகாதார அமைச்சு விசேட சுற்று நிருபம்!
மீண்டும் போருக்கு முகம்கொடுக்கும் சக்தி நாட்டுக்கு கிடையாது - பிரதமர்!
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
|
|