வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தியா பயணம் – பொருளாதார மேம்பாடுகள் குறித்து பாரதத்தின் அரச தலைவர்களுடன் விசேட சந்திப்பு!

Sunday, February 6th, 2022

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர், இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விஜயத்தின்போது அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டு அரசியல் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்பதாக வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொறுப்பேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஒன்று கூடினால் விளைவுகள் பாரதூரமான விழைவுகள் ஏற்படும் – ஜனாதிபதியிடம் சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சீன இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் கடமையாற்றவில்லை - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!
தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வெளிநாட்டு பயணிகளுக்கு PCR பரிசோதனை அவசியமில்லை - சுகாதார அமைச்சு அறி...