வெளிவருகின்றது உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் பட்டியல் !

Thursday, March 15th, 2018

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர்பட்டியல் அடங்கிய வர்த்தமானி இன்று அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சகம் கூறியுள்ளது.

குறித்த வர்த்தமானி மும்மொழிகளிலும் அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பணி லியனகே தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட மாதிரி வர்த்தமானி நேற்று கிடைத்ததாகவும் அதற்கமைய வர்த்தமானி அச்சிடப்படவுள்ளதாகவும் 8356 உறுப்பினர்களின் பெயர்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்  அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.

Related posts: