வெளியேற்றப்பட உள்ள பிரித்தானிய கழிவுகள்!

Tuesday, August 13th, 2019

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் எதிர்வரும் சில தினங்களில் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 300 கொள்கலன்களில் இவ்வாறான கழிவுகள் காணப்படுகின்றன. கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்தி வலயத்தில் குறித்த கழிவுகளை ஏற்றிய கொள்கலன்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த கழிவுகளை நாட்டிற்குள் கொண்டு செல்வதற்கான இடைக்காலத் தடையை அண்மையில் நீதிமன்றம் விதித்தது.

இந்நிலையில் குறித்த கழிவுகளை பிரித்தானியாவுக்கே அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts: