வெளியேறுகிறது அம்பான் சூறாவளி – 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கின்றது வளிமண்டலவியல் திணைக்களம் !

Wednesday, May 20th, 2020

வடக்கில் நிலை கொண்டுள்ள அம்பான் சூறாவளி இன்றைய தினம் வடகிழக்கு ஊடாக நாட்டை விட்டு வெளியேறவுள்ள நிலையில் மாலை நேரத்தில் மேற்கு வங்காள கடற்கரை ஊடாக பயணிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் அழுத்தம் காரணமாக நாட்டின் தெற்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

மத்திய மலை நாட்டு பிரதேசங்களில் விசேடமாக மேற்குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் அடைமழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் மணிக்கு 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னலினால் ஏற்பட கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றிரை தாண்டிய அடைமழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: