வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை புத்தாண்டுக்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டும் – பொலிஸ்!

Thursday, April 15th, 2021

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு பின்னரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் இன்றுமுதல் முறையாக மக்கள் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபடும்போது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அதேநேரத்தில், பொது இடங்களில் சமூக விலகலையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சிறப்பு நிகழ்வுகளை நடத்துவதற்கு பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமிருந்து முன் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டுதல்களை அமுல்படுத்த வேண்டும் என்பதுடன், பங்கேற்பாளர்கள் அதை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: